
போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறீங்களே, அதை பற்றி சொல்லுங்க! சரத்குமார் மகள் வரலட்சுமியிடம் கேட்டபோது, அதுபற்றி அப்புறம் பேசலாம். இப்போ பேச வேண்டியது மம்மா மியா ஸ்டேஜ் ஷோ பற்றிதான் என்றார். அதென்னா மம்மா மியா?
எண்பதுகளில் உலகத்தை கலக்கிய இசைக்குழு அபா! நரம்புகளில் இசையை சுண்டி விட்டு ஆட வைக்கும் படார் திடீர் பாடகர்கள் அதில் நிறைய. வெறி பிடித்தது போல ஆடும் இந்த குழுவினரின் ஆட்டத்தை பார்த்து மயங்கிய ரசிகர்கள் உலகம் முழுவதும் இருந்தார்கள். அவர்கள் பாடிய பாடலில் வரும் ஒரு வரிதான் இந்த மம்மா மியா.
புகழ் பெற்ற பாடகர் ஷெப்ரீயுடன் இணைந்து வரலட்சுமி உருவாக்கியிருக்கும் ஹாட் ஷ¨ என்ட்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்புதான் இந்த ஸ்டேஜ் ஷோ. கடந்த பத்தாண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ரசிகர்களின் மனசை கொள்ளையடித்த இந்த ஷோவை தற்போது இந்தியாவில் நடத்த முன் வந்திருக்கிறார்கள். வருகிற 4, 5 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. பின்பு பெங்களுர், ஹைதராபாத் நகரங்களிலும் நடத்தவிருக்கிறார்கள்.
பரதம், ஜாஸ், ஹிப் ஹாப், ராப் என்று கலையின் எல்லா வடிவங்களையும் கரைத்து குடித்திருக்கிறார் வரலட்சுமி. இந்த ஷோவில் இவரும், ஷெப்ரியுடன் இணைந்து ஸ்டேஜில் தோன்றி பாடுவாராம். தனது மகளின் இந்த அசுர வளர்ச்சியை பார்த்து நெகிழ்ந்து போயிருந்த சரத்குமாரை மேடைக்கு அழைத்தார் வரலட்சுமி. மேடைக்கு வந்த சரத், மகளின் அபார திறமையையும் வளர்ச்சியையும் கண்டு கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிக்க, அதுவரை சிரித்துக் கொண்டிருந்த வரலட்சுமியின் கண்களிலும் அழுகை எட்டிப்பார்த்தது. ஆனந்த கண்ணீர்.
இந்த நெகிழ்ச்சியை தவிர்க்க முடியாது என்றார்கள் இருவரும். இளம் வயதில் இத்தனை முதிர்ச்சியா என்று நிருபர்கள் வியக்கும் விதத்தில் பதிலளித்த வரலட்சுமியிடம், ஒரு பெரிய நடிகரின் மகள் என்ன அலட்டலே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
No comments:
Post a Comment